பாலியல் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்ட தனுஷ்க மீதுள்ள தடை நீக்கம்: ஸ்ரீலங்கா கிறிக்கட் அறிவிப்பு

🕔 October 17, 2023

னுஷ்க குணதிலக மீதுள்ள தடையை முழுமையாக நீக்கியுள்ளதாக ஸ்ரீலங்கா கிறிக்கட் நிறுவனம் அறிவித்துள்ளது.

அவுஸ்ரேலியாவில் பாலியல் வன்புணர்வுக் குற்றசாட்டுக்கு ஆளாகி, நீதிமன்ற விசாரணையினை எதிர்கொண்ட தனுஷ்க, வழக்கின் இறுதியில் நிரபராதி என விடுவிக்கப்பட்டார்.

ரி 20 உலகக் கோப்பைக்கான போட்டியில் கலந்து கொள்வதற்காக இலங்கை அணியுடன் அவுஸ்திரேலியா சென்றிருந்த 32 வயதுடை தனுஷ்க, 2022 ஆம் ஆண்டும் நொவம்பர் மாதம் 29 வயதுடைய பெண் ஒருவரை சிட்னியில் சந்தித்தார்.

பின்னர் அந்தப் பெண்ணுடன் அவர் உடலுறவு கொண்டதாகவும், அந்தப் பெண்ணின் விருப்பத்துக்கு மாறாக ஆணுறையை கழற்றி விட்டு உறலுறவை தொடர்ந்ததாகவும் குறித்த பெண் குற்றம்சாட்டியிருந்தார்.

08 டெஸ்ட் போட்டிகள் உட்பட 100 க்கும் மேற்பட்ட கிறிக்கட் போட்டிகளில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடிய தனுஷ்க குணதிலக – கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து கிறிக்கட் போட்டிகளிலிருந்த இடைநிறுத்தப்பட்டார்.

தொடர்பான செய்தி: பாலியல் பலாத்கார குற்றச்சாட்டிலிருந்து இலங்கை கிறிக்கட் வீரர் தனுஷ்க விடுதலை: நீதிமன்றுக்கு வெளியில் அவர் கூறியது என்ன?

Comments