அட்டாளைச்சேனையில் லொயிட்ஸ் ஆதம்லெப்பை தலைமையில் ஐ.தே.கட்சி செயலாளர் பாலித ரங்கே பண்டார கலந்து கொள்ளும் நிகழ்வுகள்

🕔 July 28, 2023

க்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பாலித ரங்கே பண்டார கலந்து கொள்ளும் நிகழ்வுகள் அட்டாளைச்சேனையில் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை (30) நடைபெறவுள்ளன.

ஐக்கிய தேசியக் கட்சியின் பொத்துவில் தொகுதி பிரதம அமைப்பாளரும், கிழக்கு மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் பணிப்பாளர் சபை உறுப்பினரும், லொயிட்ஸ் குழுமத்தின் தலைவருமான யூ.கே. ஆதம்லெப்பை தலைமையில் மேற்படி நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

ஐக்கிய தேசியக் கட்சியின் பொத்துவில் தொகுதி செயற்குழுத் தெரிவும் அன்றைய தினம் இடம்பெறவுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு அட்டாளைச்சேனை லொயிட்ஸ் மண்டபத்தில் நடைபெறும் கூட்டமொன்றிலும் பாலித ரங்கே பண்டார கலந்து கொள்ளவுள்ளார்.

நிகழ்வுகளில் முன்னாள் அமைச்சர் அனோமா கமகே உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொள்கின்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்