போதகர் ஜெரோம் பெனாண்டோவின் வங்கிக் கணக்குகளில் 12 பில்லியன் ரூபாவுக்கும் அதிக தொகை: உச்ச நீதிமன்றில் தெரிவிப்பு

🕔 July 28, 2023

பௌத்த மதம் தொடர்பில் அண்மையில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்ட போதகர் ஜெரோம் பெனாண்டோவின் 11 வங்கிக் கணக்கு மொத்தம் 12.2 பில்லியன் ரூபா உள்ளதாக, உச்ச நீதிமன்றத்தில் இன்று (28) தெரிவிக்கப்பட்டது.

சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினம் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் பிரியந்த நவான இதனை நீதிமன்றுக்கு அறிவித்தார்.

எல்லே குணவன்ச தேரர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று (28) காலை இடம்பெற்றபோதே, போதகர் ஜெரோம் பெனாண்டோவின் வங்கிக் கணக்குகளில் உள்ள பணம் தொடர்பில் தெரிவிக்கப்பட்டது.

ஜெரோம் பெனாண்டோவின் 11 வங்கிக் கணக்குகளை ஆராய்ந்தபோது இந்த தகவல் கிடைத்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்