நெடுந்தீவு வீடொன்றில் ஐவர் கொலை: வெட்டுக் காயங்களுடன் தப்பிய பெண் வைத்தியசாலையில் அனுமதி

🕔 April 22, 2023

யாழ்ப்பாணம் – நெடுந்தீவு பகுதியிலுள்ள வீடொன்றில் இன்று (22) அதிகாலை 05 பேர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கொலையானவர்களில் மூன்று பெண்களும் இரண்டு ஆண்களும் அடங்குகின்றனர்.

அடையாளம் தெரியாதவர்கள் குறித்த வீட்டினுள் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

இதன்போது வெட்டுக் காயங்களுடன் தப்பிய பெண் ஒருவர் – யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்த விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்