அக்குரணை பள்ளிவாசல்களில் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக, பொய் தகவல் வழங்கிய மௌலவி கைது

🕔 April 22, 2023

க்குரணையில் உள்ள பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக, அவசர பொலிஸ் தொலைபேசி இலக்கத்கத்துக்கு அழைத்து – பொய்யான தகவல் வழங்கிய சந்தேக நபரை ஹரிஸ்பத்துவ பிரதேசத்தில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தவறான தகவல்களை வழங்கிய சந்தேக நபரின் நோக்கம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

21 வயதுடைய மௌலவி ஒருவரையே – பொலிஸ் சைபர் குற்றத்தடுப்பு பிரிவினர் இவ்வாறு கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மேலதிக விசாரணைகள் மற்றும் தொலைபேசி அழைப்பின் பகுப்பாய்வுக்குப் பின்னர், சந்தேகநபரின் இருப்பிடத்தை பொலிஸாரால் கண்டுபிடிக்க முடிந்ததுள்ளது,

சந்தேகநபர் தற்போது பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார், இதேவேளை அவசர சேவைப் பிரிவுக்கு வழங்கப்பட்ட பொய்யான தகவல்களின் பின்னணியில் உள்ள காரணத்தை கண்டறிய விசாரணைகள் தொடர்கின்றன.

இதேவேளை, பொலிஸ் அவசர தொலைபேசி எண்களுக்கு தவறான அல்லது குறும்பு அழைப்புகளை மேற்கொள்வதைத் தவிர்க்குமாறு பொதுமக்களை, அறிக்கையொன்றின் ஊடாக பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர். ஏனெனில் இது தேவையற்ற பீதியை ஏற்படுத்துவதோடு, உண்மையான அவசரநிலைகளில் கவனம் செலுத்துவதில் இருந்து அதிகாரிகளை திசைதிருப்பக்கூடும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற செயல்கள் சட்டப்படி தண்டிக்கப்படக் கூடியவை என்றும், இதற்கு கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும் என்றும் பொலிஸ் மேலும் தெரிவித்துள்ளது.

தொர்பான செய்தி: ‘பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தப்படலாம்’: தகவலையடுத்து, அக்குரணையில் பாதுகாப்பு தீவிரம்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்