உரம் வழங்குவதில் ஏற்பட்ட தகராறு: கமநல சேவை நிலைய பெண் உத்தியோகத்தர் வேட்பாளரால் வெட்டிக் கொலை

🕔 March 28, 2023

ங்காலை – நெடோல்பிட்டிய கமநல சேவை நிலைய விவசாய ஆராய்ச்சி பெண் உத்தியோகத்தர் ஒருவர், தகராறு காரணமாக வெட்டிக் கொல்லப்பட்டுள்ளதாக தங்காலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தங்காலை நெடோல்பிட்டிய – வெலியர பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய ஆர்.எம். தீபாஷிகா என்பவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.

இலவசமாக வழங்கப்படும் உரத்தை விநியோக்காமையினால் ஏற்பட்ட தகராறு காரணமாக இவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

கமநல சேவை நிலையத்தில் இலவசமாக உரம் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் (26) விவசாயிகளுக்கு உரம் விநியோகிக்கும் போது, ஒருவர் உரம் கோரி அதிகாரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றியதை அடுத்து அவர் அந்த விவசாய நிலையத்தை விட்டு வெளியேறியுள்ளார்.

இந்தப் பின்னணியில், பாதிக்கப்பட்ட பெண் நேற்று (27) காலை வேலைக்காக வீட்டை விட்டு வெளியேறிய போது, சந்தேக நபர் கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளார்.

இதனால் படுகாயமடைந்த பெண், தங்காலை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.

இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் 41 வயதுடைய நெடோல்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த ‘டேனி பேபி’ என அழைக்கப்படும் ஜயவர்தன பத்திரனகே சரத் என்பவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர் உள்ளூராட்சி தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Comments

புதிது பேஸ்புக் பக்கம்