தங்கம் விலை குறைந்தது

🕔 March 22, 2023

ங்கத்தின் விலை சுமார் 10 ஆயிரம் ரூபாவினால் குறைவடைந்துள்ளதாக இரத்தினக்கல் மற்றும் ஆபரண சங்கம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி உயர்வினால் இவ்வாறு தங்கத்தின் விலை குறைவடைந்துள்ளது.

இன்றைய நிலவரப்படி, 24 கரட் தங்கம் ஒரு பவுணுக்கான விலை165,000 ரூபாவாகும். ஒரு பவுண் 22 கரட் தங்கம் 152,000 ரூபாவாகும்.

இம்மாதம் ஆரம்பத்திலும் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்ட போதிலும், பின்னர் அதன் விலை உயர்ந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்பான செய்தி: தங்கத்தின் விலையில் சடுதியான வீழ்ச்சி

Comments

புதிது பேஸ்புக் பக்கம்