இருபது லட்சம் முட்டைகள், இந்தியாவிலிருந்து இலங்கையை வந்தடைந்தன

🕔 March 23, 2023

ந்தியாவில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட முதலாவது தொகுதி முட்டைகள் நாட்டை வந்தடைந்துள்ளன.

குறித்த முட்டை தொகை இன்று (22) காலை நாட்டை வந்தடைந்ததாக அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் டி.ஏ.டி. ரஞ்சித் தெரிவித்தார்.

இந்த நாட்டில் முட்டை விலையை கட்டுப்படுத்தும் வகையில், இந்தியாவில் இருந்து முட்டையை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்து.

அதற்கமைவாக 02 மில்லியன் முட்டைகள் முதற்கட்டமாக இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக அரச வர்த்தக கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட முட்டைகள் தொடர்பில் சுகாதார அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் பின்னர் அவை விடுவிக்கப்பட உள்ளன.

இந்த இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளை பேக்கரி தொழில் சார்ந்த உற்பத்திகளுக்கு – மானிய விலையில் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்