சீமெந்து விலை மீண்டும் அதிகரிப்பு

🕔 April 1, 2022

ள்நாட்டில் தயாரிக்கப்படும் மற்றும் இறக்குமதி செய்யப்படும் சீமெந்து 50 கிலோகிராம் மூடை ஒன்றின் விலை 2350 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மார்ச் மாத தொடக்கத்தில் 50 கிலோ எடையுள்ள சிமெண்ட் மூட்டை 1350 ரூபாவாக இருந்தது.

இந்த விலை அதிகரிப்புகளுக்கு முன்னர் மிக நீண்ட காலமாக 50 கிலோ சீமெந்து மூட்டை 950 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.

சடுதியாக சீமெந்து விலை அதிகரிக்கப்பட்டமை காரணமாக, கட்டட நிர்மாண வேலைகள் கணிசமானளவு நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

இதனால், இந்த தொழிலுடன் தொடர்புபட்டோர் வேலையிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்