ஜனாதிபதியின் வீட்டை, மஹிந்த மற்றும் நாமல் ஆர்ப்பாட்டத்தின் பின்னர் பார்வையிட்டனர்

🕔 April 1, 2022

னாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தனிப்பட்ட இல்லத்துக்கு முன்பாக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற பின்னர், அங்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் இன்று சென்றனர்.

மிரிஹானவில் உள்ள ஜனாதிபதியின் தனிப்பட்ட இல்லத்துக்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த பாரியளவிலான மக்களை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகங்களை மேற்கொண்டதையடுத்து அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது.

பல வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டதுடன், அமைதியின்மையின் போது பாதுகாப்பு படை உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் காயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக 44 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Comments