
ஐந்தாரம் தரம் புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகளை இன்றிரவுக்குள் வெளியிடுமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
2021ம் ஆண்டுக்கான புலமை பரிசில் பரீட்சை கடந்த ஜனவரி மாதம் 22ம் திகதி நடைபெற்றது.
இம்முறை புலமை பரிசில் பரீட்சைக்காக சிங்கள மொழி மூலம் 255,062 பரீட்சார்த்திகளும், தமிழ் மொழி மூலம் 85,446 பரீட்சார்த்திகளுமாக 340,588 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர்.
நாடு முழுவதும் 2943 பரீட்சை மத்திய நிலையங்களில் இம்முறை பரீட்சைகள் நடைபெற்றன.
கொவிட் தொற்றுக்குள்ளானோருக்காக 108 பரீட்சை மத்திய நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டிந்தன.



