ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் 01 லட்சம் தொலைபேசி உரையாடல்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டன

🕔 August 25, 2021

ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பில் இதுவரையில் 311 பேர் தடுப்புக்காவலில் அல்லது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன இன்று (25) தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பில் பொலிஸ்மா அதிபரின் விஷேட உரையின் போதே அவர் இந்த தகவலைக் கூறினார்.

அத்துடன் 100,000 தொலைபேசி உரையாடல்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், 365 மில்லியன் ரூபா பெறுமதியான பணம் மற்றும் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்