
இலங்கையில் ‘காட்போட்’ இனால் உருவாக்கப்பட்ட சவப் பெட்கள் சந்தைக்கு வந்துள்ளன.
இந்த சவப்பெட்டியின் விலை 4500 ரூபாவாகும். நாட்டில் கொவிட் மரணங்கள் அதிகரித்துள்ள நிலையில், ஏழைகள் குறைந்த விலையில் இந்த சவப்பெட்டிகளைக் கொள்வனவு செய்யக் கூடியதாக உள்ளது.
தெஹிவளை – கல்கிஸ்ஸ நகர சபை உறுப்பினர் பிரியந்த சஹபந்துவின் யோசனையில் உருவான இந்த சவப்பெட்டிக்கான தயாரிப்பு வேலைகள் ஆறு மாதங்களுக்கு முன்னர் ஆரம்பமானது.
இந்த ‘காட்போட்’ சவப்பெட்டி 100 கிலோ எடை வரை தாங்கக் கூடியது என, அதன் தயாரிப்பாளர் சஹபந்து தெரிவிக்கின்றார்.
மரத்தினால் செய்யப்பட்ட சவப்பெட்டிகளை விடவும், மேற்படி ‘காட்போட்’ சவப்பெட்டி – எரிவதற்கு மிகக் குறைந்தளவான மின்சாரம் மற்றும் எரிபொருளே தேவைப்படுவதாகவும் அதன் தயாரிப்பாளர் கூறியுள்ளார்.
சாதாரண மர சவப்பெட்டிகள் 30 ஆயிரம் தொடக்கம் 40 ஆயிரம் ரூபா வரையில் விற்பனை செய்யப்படும் நிலையில், 4500 ரூபாவுக்கு ‘காட்போட்’ சவப்பெட்டிகள் சந்தையில் கிடைக்கின்றன.
வீடியோ



