தொலைக்காட்சி நடிகை, களனி கங்கையில் மூழ்கி பலி

🕔 April 18, 2018

தொலைக்காட்சி நாடக நடிகையொருவர் களனி கங்கையில் நீராடிய போது, நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் நேற்று செவ்வாய்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் கண்டி புப்புரஸ்ஸ பகுதியை சேர்ந்த, ஒரு பிள்ளையின் தாயான 27 வயதுடைய துஷானி த சில்வா என்பவராவார்.

இவர் தொலைக்காட்சி நாடக நடிகை என்பது குறிப்பிடத்தக்கது.

கண்டியில் இருந்து தனது குடும்பத்துடன் கித்துல்கலவுக்கு சுற்றுலா சென்றிருந்த நிலையில் நீராடிய போது உயிரிழந்துள்ளார்.

இவர் நீரில் முழ்கி காணாமல் போயுள்ள நிலையில், குடும்ப உறவினர்கள் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து தேடினர். இதனையடுத்து, இவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்