தனியார் வங்கியில் கொள்ளை; தலைக் கவசத்தால் முகத்தை மறைத்து வந்தவர் கைவரிசை

🕔 April 18, 2018

சீதுவை பிரதேசத்தில் தனியார் வங்கியொன்றில் இன்று புதன்கிழமை காலை கொள்ளைச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

முகத்தை மறைக்கும் வகையில் தலைக்கவசம் அணிந்திருந்த சந்தேக நபர், பிஸ்டர் போன்ற ஒரு பொருளைக் காட்டி,  கொள்ளையில் ஈடுபட்டார் எனவும் பொலிஸ் பேச்சாளர் கூறியுள்ளார்.

கொள்ளையில் ஈடுபட்ட நபர் தப்பிச் சென்றுள்ளார்.

மேலும், கொள்ளையிடப்பட்ட பணம் எவ்வளவு எனவும் இதுவரை தெரியவில்லை.

சீதுவை பொலிஸார் இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்