வாக்கெடுப்புக்கு முன்னர் பிரதமர் பதவி விலக வேண்டுமென, சுதந்திர கட்சி கோரும்: அமைச்சர் டிலான்

🕔 April 3, 2018

ம்பிக்கையில்லா பிரேரணைக்கு முன்னர், பிரதமர் பதவியிலிருந்து விலகுமாறு ரணில் விக்ரமசிங்கவை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கோரும் என, ராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில், இதற்கான தீர்மானம் நேற்று திங்கட்கிழமை இரவு எடுக்கப்பட்டதாக தெரியவருகிறது.

எவ்வாறாயினும், இது தொடர்பில் ஜனாதிபதியின் முடிவு இதுவரையில் வெளியாகவில்லை.

இந்த நிலையில், ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் நேற்றைய தினம் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இதேவேளை, பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் தமது நிலைப்பாடு என்ன என்பதை, ஜே.வி.பி, தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகள் இன்று செவ்வாய்கிழமை அறிவிக்கவுள்ளன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்