பல்கலைக்கழக ஊழியர்களின் வேலை நிறுத்தத்தை கைவிட இணக்கம்: அமைச்சர் கபிர் ஹாசிம் தெரிவிப்பு

🕔 April 3, 2018

ல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் மேற்கொண்டுவரும் வேலை நிறுத்தத்தைக் கைவிடுவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளனர் என்று, உயர்கல்வி அமைச்சர் கபிர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.

கல்வி சாரா ஊழியர்களுடன் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து வேலை நிறுத்தத்தைக் கைவிடுவது தொடர்பில் இணக்கம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, கல்வி சாரா ஊழியர்கள் விடுமுறைத் தினங்களில் பணியாற்றுவதற்கான கொடுப்பனவை 10 வீதத்தால் அதிகரிப்பதற்கு அமைச்சு இணக்கம் வெளியிட்டுள்ளது என்று, பல்கலைக்கழக தொழிற்சங்க இணைக் குழுவின் தலைவர் எட்வர்ட் மல்வட்டகே தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இந்த தீர்மானம் தொடர்பில் சுற்று நிருபம் வெளியிடப்படும் வரை தமது தொழிற்சங்க நடவடிக்கை தொடரும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில், நாளைய தினத்திற்குள் சுற்றுநிரூபத்தை வெளியிடுவதற்கு அமைச்சு இணக்கம் தெரிவித்துள்ளதாக கூறியுள்ள அவர், ஏனைய பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்கு விசேட குழு ஒன்றை நியமிக்க அமைச்சர் இணக்கம் வெளியிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்