முஸ்லிம்கள் மீதான இனவாத தாக்குதல் தொடர்பில், ஐ.நா. சபையின் கொழும்பு காரியாலயத்தில் அறிக்கை சமர்ப்பிப்பு

🕔 March 16, 2018
– அஷ்ரப் ஏ சமத் –

லங்கையில் அண்மைக்காலமாக முஸ்லிம் மக்கள் மீது நடத்தப்பட்டு வரும் இனவாத தாக்குதல்கள் தொடர்பான அறிக்கையொன்றினை, முஸ்லிம்  உரிமைகளுக்கான கூட்டமைப்பினர் கொழும்பிலுள்ள ஜக்கிய நாடுகள் சபை அலுவலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை கையளித்தனர்.

கொழும்பு – பம்பலப்பிட்டி ஜூம்ஆப் பள்ளிவாசலில் இடம்பெற்ற ஜூம்ஆ  தொழுகையினையடுத்து, அங்கு ஒன்று திரண்ட முஸ்லிம்கள், ஐக்கிய நாடுகள் சபையின் கொழும்பிலுள்ள அலுவலகம் வரை அமைதி ஊர்வலமாகச் சென்று, மேற்படி அறிக்கையினைக் கையளித்தனர்.

இலங்கையில் அண்மைக்காலமாக முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்டு வரும் அநீதிகள் சம்பந்தமான மேற்படி அறிக்கைய, ஜக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அனுப்பும்படி, ஐக்கிய நாடுகள் சபையின் கொழும்பு அலுவலக அதிகாரியிடம், ஊர்வலமாகச் சென்ற முஸ்லிம்கள் கையளித்தனர்.

இதன்போது, குறித்த அறிக்கையினை கையளித்தோர் அங்கு ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்; “கடந்தகால அரசாங்கத்திலும் தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்திலும், இந்த நாட்டில் வாழும் சிறுபான்மைச் சமுகத்தினருக்கு தொடா்ந்தும்  அநீதிகள் இழைக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு அநீதியிழைப்பவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். சட்டம் ஒழுங்குகளை முறையாக பாதுகாக்க வேண்டும்” என்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்