பின்னடைவுக்கு நானே பொறுப்பு; விரைவில் மாற்றங்ளை மேற்கொள்வேன்: ஜனாதிபதி தெரிவிப்பு

🕔 February 12, 2018

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு இந்தத் தேர்தலில் ஏற்பட்டுள்ள பின்னடைவுக்கான முழுப் பொறுப்பினையும் , தான் ஏற்றுக் கொள்வதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை தன்னைச் சந்தித்த போதே, ஜனாதிபதி இதனைக் கூறினார்.

இதேவேளை, அரசாங்கத்தில் பாரிய மாற்றங்களை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் உறுதியளித்தார்.

“இந்தத் தேர்தலில் சுதந்திரக் கட்சிக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவுகளுக்கான முழுப் பொறுப்புகளையும் நான் ஏற்றுக் கொள்கிறேன்.

மாற்றமொன்றுக்காக மக்கள் வாக்களித்துள்ளனர். அவர்கள் இதன் மூலம் வழங்கியுள்ள தகவலுக்கு சாதகமாக நான் பதிலளிப்பேன். அந்த வகையில், தேவையான மாற்றங்களை விரைவில் அறிமுகப்படுத்துவேன்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்