விசேட தேவையுடையோர் வாக்களிக்கச் செல்ல, இலவச போக்குவரத்து: நாளைக்குள் விண்ணப்பிக்கவும்

இந்த வசதியினைப் பெற்றுக் கொள்வதற்காக, நாளைய தினத்துக்கு முன்னர் விண்ணப்பிக்குமாறு தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
விஷேட தேவையுடையவர்கள் வாக்களிப்பு நிலையங்களுக்கு செல்லும் பொருட்டு, தேர்தல்கள் திணைக்களத்தினால் இலவசபோக்குவரத்து வசதிகள் செய்து கொடுக்கப்பட உள்ளன.
இதேவேளை நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலை முன்னிட்டு, எதிர்வரும் 07ம் திகதி விஷேட பஸ் போக்குவரத்து சேவையை முன்னெடுக்க உள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் போக்குவரத்துப் பிரதிப் பொது முகாமையாளர் சந்திரசிறி தெரிவித்தார்.