தும்புத்தடி, கறுப்பு கொடிகள் சகிதம், மு.கா. தலைவருக்கு எதிர்ப்பு தெரிவித்து, சாய்ந்தமருது மக்கள், வீதியில் அணி திரள்வு
🕔 February 3, 2018
– மப்றூக் –
தும்புத்தடி, துடைப்பம் மற்றும் கறுப்புக் கொடிகள் சகிதம், மு.கா. தலைவருக்கு எதிர்ப்புத் தெரிவித்து சாய்ந்தமருது பிரதான வீதியெங்கும் பொதுமக்கள் தற்போது கூடியுள்ளனர்.
சாய்ந்தமருதில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக, மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் – இன்றைய தினம் அங்கு வருகை தரவுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ரஊப் ஹக்கீமுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்காக, தும்புத்தடி, துடைப்பம் மற்றும் கறுப்புக் கொடிகள் சகிதம் பிரதான வீதியில் பொதுமக்கள் திரண்டுள்ளனர்.
பொலிஸார் மற்றும் அதிரடிப்படையினர் பாதுகாப்புக்காக பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளபோதும், மக்களின் இந்த எதிர்ப்பு நடவடிக்கை தொடர்கிறது.
ஆயினும், மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் இன்னும் சாய்ந்தமருதுக்கு வரவில்லை.
மு.கா. தலைவர் ஹக்கீமுடைய வருகைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் சாய்ந்தமருதிலுள்ள கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.