கல்கிசை பொலிஸ் நிலைய குற்றப் பிரிவின் முன்னாள் பதில் பொறுப்பாளருக்கு விளக்க மறியல்

🕔 February 3, 2018

டகவியலாளர் லசந்த விக்ரமதுங்க படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட கல்கிசை பொலிஸ் நிலைய குற்றப் பிரிவின் முன்னாள் பதில் பொறுப்பதிகாரியை எதிர்வரும் 16ஆம் திகதிவரை விளக்க மறியலில் வைக்குமாறு நேற்று வெள்ளிக்கிழமை உத்தரவிடப்பட்டது.

கல்கிசை நீதவான் நீதிமன்றில் மேற்படி நபர் ஆஜர் செய்யப்பட்ட போது, இந்த உத்தரவு வழங்கப்பட்டது.

மேற்படி சந்தேக நபரை நேற்று முன்தினம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்ததாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்திருந்தார்.

மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் 2009ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 08ஆம் திகதியன்று, அலுவலகத்துக்குக் செல்லும் வழியில் ஆயுததாரிகளால் தாக்கப்பட்டு லசந்த படுகொலை செய்யப்பட்டார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்