ஜனாதிபதியிடம் அசிங்கப்பட்டார் உதுமாலெப்பை; அட்டாளைச்சேனையில் அவமானம்

🕔 February 1, 2018

– அஹமட் –

கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு பல தடவை கைலாகு கொடுக்க முற்பட்ட போதும், அதனை ஜனாதிபதி கணக்கில் எடுக்காமல் சென்ற சம்பவமொன்று, நேற்று புதன்கிழமை அட்டாளைச்சேனையில் இடம்பெற்றது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும், அதன் பங்காளிக் கட்சிகளுக்கும் உள்ளுராட்சித் தேர்தலில் ஆதரவைத் திரட்டும் நோக்கில், நேற்றைய தினம் கிழக்கு மாகாணத்தின் பல இடங்களுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விஜயம் செய்திருந்தார்.

இதற்கிணங்க, அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை மைதானத்தில், நேற்றைய தினம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக் கூட்டத்தில், ஜனாதிபதி கலந்து கொண்டார்.

முன்னாள் அமைச்சரும் தேசிய காங்கிரஸ் தலைவருமான ஏ.எல்.எம். அதாஉல்லா தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது.

இந்த நிகழ்வுக்கு வருகை தந்த ஜனாதிபதியை முன்னாள் அமைச்சர் அதாஉல்லா, வெற்றிலை கொடுத்து வரவேற்று, மேடைக்கு அழைத்துச் சென்றார்.

இதன்போது, ஜனாதிபதி அருகில் சென்ற கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் உதுமாலெப்பை – ஜனாதிபதிக்கு கைலாகு கொடுக்க முற்பட்ட போதும், ஜனாதிபதி அதனைக் கணக்கில் எடுக்காது நடந்தார். அதன் பின்னரும் ஜனாதிபதியிடம் உதுமாலெப்பை எதையோ கூறி – கைலாகு கொடுக்க முற்பட்டார். ஆனால், அதையும் பொருட்படுத்தாமல் ஜனாதிபதி சென்று விட்டார்.

உதுமாலெப்பைக்கு நேர்ந்த இந்த அவமானம் குறித்து, அங்கிருந்த பலரும் பேசிக் கொண்டனர்.

வீடியோ

Comments

புதிது பேஸ்புக் பக்கம்