அரசியலிலிருந்து ரவி முற்றாக விலக வேண்டும்: கெவிந்து குமாரதுங்க

🕔 February 1, 2018

ரசியலிலிருந்து ரவி கருணாநாயக்க முற்றாக விலக வேண்டும் என்று, தேசியக் கூட்டுக் குழுவின் நிறைவேற்று உறுப்பினரும், அரசியல் விமர்சகருமான கெவிந்து குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

அவ்வாறில்லாது விட்டால் ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவர் பதவியிலிருந்தாவது, அவர் ராஜிநாமா செய்ய வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

பிணைமுறி மோசடி தொடர்பான சர்ச்சையினை முன்வைத்தே, மேற்கண்ட விடயத்தினை கெவிந்து கூறினார்.

ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் இன்று வியாழக்கிழமை கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.

“அரசியலில் தொடர்ந்து செயற்படுவதற்கு ரவி கருணாநாயக்கவுக்கு எதுவித தாரமீக உரிமைகளும் இல்லை.

அதேவேளை, நடந்தவை அனைத்துக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவே பொருப்பேற்க வேண்டும். ஏனெனில், பிணைமுறி விடயத்துக்கு ரணில் விக்ரமசிங்கவே பொறுப்பாக இருந்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்