வாக்குச் சீட்டை படம் பிடித்த ஆசிரியர் கைது; தபால் மூல வாக்களிப்பின் போது சம்பவம்

🕔 January 27, 2018

பால் மூல வாக்களிப்பின் போது, தான் வாக்களித்த வாக்குச் சீட்டினைப் படம் பிடித்த ஆசியர் ஒருவரை, கெபிடிகொல்லாவ பொலிஸார் கைது செய்தனர்.

இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை ஹொரவப்பொத்தானையில் இடம்பெற்றது.

44 வயதுடைய ஆசிரியர் ஒருவர், தபால் மூல வாக்களிப்பின்போது, தான் வாக்களித்த வாக்குச் சீட்டினை, வாக்களிப்பு நிலையத்தில் வைத்து தனது கைத்தொலைபேசி மூலமாக படம் பிடித்துள்ளார்.

இதனைக் கண்ட வாக்களிப்பு நிலைய உத்தியோகத்தர் பொலிஸாருக்கு அறிவித்தமையினை அடுத்து, குறித்த ஆசிரியரை பொலிஸார் கைது செய்தனர்.

வாக்களிப்பு நிலையங்களுக்குள் கைத்தொலைபேசிகளைக் கொண்டு செல்வது தடை செய்யப்பட்டுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்திருந்த நிலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்