சல்மான் ராஜிநாமாச் செய்தமை, கட்சிக்கே தெரியாது; மு.கா. செயலாளர் நிசாம் காரியப்பர் தெரிப்பு

🕔 January 18, 2018

– முன்ஸிப் அஹமட் –

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். சல்மான் ராஜிநாாமா செய்தமை தொடர்பில், தமது கட்சியான முஸ்லிம் காங்கிரஸ் அறியவில்லை என்று, அந்தக் கட்சியின் செயலாளர் நிசாம் காரியப்பர் வானொலியொன்றின் செய்திச் சேவைக்குத் தெரிவித்துள்ளார்.

அவ்வாறாயின் முஸ்லிம் காங்கிரசுக்கு தெரியாமல் சல்மானை ராஜிநாமா செய்வதற்கு அழுத்தம் கொடுத்த வெளிச் சக்தி எது என்கிற கேள்வி எழுந்துள்ளது.

எவ்வாறாயினும், மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீமின் பணிப்பின் பேரிலேயே, சல்மான் ராஜிநாமா செய்ததாக கூறப்படுகிறது.

இருந்த போதிலும், ஒரு கட்சியின் செயலாளருக்குத் தெரியாமல், அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரொருவர் ராஜிநாமா செய்துள்ளார் என்கிற தகவல் வியப்பானதாகும்.

2015ஆம் ஆண்டின் போது முஸ்லிம் காங்கிரசின் யாப்பில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தின் பின்னர், அந்தக் கட்சியின் செயலாளர் பதவிகளை வகிப்போர், தலைவர் ஹக்கீமுடைய அடிமைகளாகவே செயற்பட்டு வருகின்றனர் என்று, அந்தக் கட்சியின் முன்னாள் தவிசாளர்பசீர் சேகுதாவூத் முற்றும் முன்னாள் செயலாளர் நாயகம் எம்.ரி. ஹசனலி ஆகியோர் சாடி வருகின்றமை, இந்த இடத்தில் நினைவு கொள்ளத்தக்கதாகும்.

Comments