நாடு முழுவதும் 30 ஆயிரம் போலி வைத்தியர்கள்; இனங்காணும் நடவடிக்கை ஆரம்பம்: சுகாதார அமைச்சர் ராஜித

🕔 December 16, 2017

போலி வைத்தியர்கள் சுமார் 30 ஆயிரம் பேர், நாடு முழுவதும் உள்ளனர் என்று, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சு நேற்று வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயத்தை அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், போலி வைத்தியர்களை இனங்காண்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ள அமைச்சர், குறித்த நடவடிக்கைக்கு பொலிஸாரின் உதவியை பெற்றுக்கொள்ளவுள்ளதாகவும் கூறினார்.

“இதேவேளை, நாடளாவிய ரீதியில் சுமார் 15 ஆயிரம் உத்தியோகப்பூர்வ வைத்தியர்கள் தனியார் வைத்தியசாலைகளில் கடமையாற்றி வருகின்றனர்.

இவ்வாறு கடமையறாற்றும் உத்தியோகப்பூர்வ வைத்தியர்கள் பதிவுகளை மேற்கொள்வார்களாயின் போலி வைத்தியர்களை இலகுவாகக் கண்டறிய முடியும்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Comments