விமலுக்கு எதிராக வழக்கு; சட்ட விரோதமாக ஏழரைக் கோடி ரூபாய் பெறுமதியான சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டு

🕔 November 30, 2017

தேசிய சுதந்திர முன்னணி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்சவுக்கு எதிராக, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் லஞ்ச ஊழல் ஆணைக்குழு வழக்கு தாக்கல் செய்துள்ளது.

வருமானத்துக்கு மேலதிகமாக, சட்ட விரோதமான முறையில் சுமார் 07 கோடி 50 லட்சம் ரூபாய் பெருமதியான சொத்துக்களை ஈட்டியுள்ளதாக, விமல் வீரவன்சவுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் இவருக்கு எதிராக 39 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு, மேற்படி வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Comments