மன்னிப்புக் கோரினார் அருந்திக; புதிய அமைச்சுப் பதவி வழங்குவது தொடர்பில் ஜனாதிபதி பரிசீலிப்பு

🕔 September 14, 2017

சுற்றுலாத்துறை மற்றும் கிறிஸ்தவ மத விவகார பிரதியமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட அருந்திக பெனாண்டோவுக்கு, புதிய அமைச்சுப் பதவியொன்றினை வழங்குவது தொடர்பில் ஜனாதிபதி பரிசீலித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதியிடம் அருந்திக பெனாண்டோ மன்னிப்புக் கோரியமையினை அடுத்து, இந்த நிலை உருவாகியுள்ளது.

அருந்திக பெனாண்டோவை அவர் வகித்த பிரதியமைச்சுப் பதவியிலிருந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனது நிறைவேற்று அதிகாரத்தினைப் பயன்படுத்தி, நேற்று முன்தினம் நீக்கியிருந்தார்.

இதனையடுத்து, நேற்று புதன்கிழமை ஜனாதிபதியை தனியாகச் சந்தித்த அருந்திக பெனாண்டோ, தனது நடவடிக்கைகள் தொடர்பில் மன்னிப்புக் கோரினார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக, அருந்திக பெனாண்டோ தொடர்ந்து பேசி வந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்