20ஆவது திருத்தம் எனும் துரோகத்துக்கு எதிராக; கடையடைப்பும், கண்டனமும்: நாளை வெள்ளிக்கிழமை

🕔 September 14, 2017

– அஹமட் –

கிழக்கு மாகாணம் முழுவதும் நாளை வெள்ளிக்கிழமை கடையமைப்பு மற்றும் கண்டம் மேற்கொள்வதற்கு ஒன்று திரளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதோடு, அம்பாறை மாவட்டமெங்கும் துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டுள்ளன.

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு கிழக்கு மாகாணத்தில் ஆதரவு தெரிவித்தமையினூடாக, வடக்கு – கிழக்கு மாகாணங்களை இணைப்பதற்கு துணைபோன மு.காங்கிரஸ் மற்றும் த.தே.கூட்டமைப்பு ஆகியவற்றின் முகத்திரையைக் கிழிப்போம் ஒன்றுபடுங்கள் எனும் கோசத்துடன், இந்த கடையடைப்பு மற்றும் கண்டன நடவடிக்கைக்கு  அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கிழக்கு நமதே‘ அமைப்பு, இந்த கடையடைப்பு மற்றும் கண்டனத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.

மேலும் புனிதமான வெள்ளிக்கிழமையன்று வணக்க வழிபாட்டில் ஈடுபட்டு, 20ஆவது திருத்தத்தின் ஊடாக மேற்கொள்ளப்படவுள்ள வடக்கு – கிழக்கு இணைப்பு எனும் பேராபத்திலிருந்து பாதுகாக்குமாறு இறைவனிடத்தில் பிரார்தனை செய்யுமாறும் மேற்படி துண்டுப் பிரசுரத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

துண்டுப்பிரசுரத்தின் முழுவடிவம் வருமாறு; 

Comments

புதிது பேஸ்புக் பக்கம்