நிதியமைச்சராகிறார் மங்கள சமரவீர

🕔 May 14, 2017

நிதியமைச்சராக மங்கள சமரவீர நியமிக்கப்படவுள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றன.

விரைவில் மேற்கொள்ளப்படவுள்ள அமைச்சரவை மாற்றத்தின்போது, மங்கள சமரவீரவுக்கு நிதியமைச்சு வழங்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், தற்போதைய நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவும், இதற்கு இணங்கியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

சீனா சென்றுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நாடு திரும்பியதும் அமைச்சரவை மாற்றம் மேற்கொள்ளப்படும்.

இதேவேளை, அமைச்சரவையில் மாற்றம் செய்யும் வரை, வாராந்த அமைச்சரவைக் கூட்டங்களை ஒத்தி வைக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்