பரபரப்பு பெண்ணுடன், மு.கா. தலைவர்: புகைப்படம் அம்பலம்

🕔 February 19, 2017

Hakeem - 022– புதிது செய்தியாளர் –

மு.காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம், முஸ்லிம் பெண் ஒருவருடன் மிகவும் ஹாஷ்யமாக சிரித்துப் பேசி, உரையாடிக் கொண்டிருக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்பபடம் ஒன்று, புதிது செய்தித்தளத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பெண்ணொருவருடன் அரசியல்வாதியான மு.கா. தலைவர் ஹக்கீம் – சிரித்துப் பேசுவதென்பது, சாதாரணமாக செய்திப் பெறுமானம் கொண்ட விடயமல்ல என்பதை எல்லோரும் அறிவோம்.

ஆனால், மு.கா. தலைவர் ஹக்கீமுடன் இங்கு பேசிக் கொண்டிருக்கும் பெண், சில காலங்களுக்கு முன்னர் சர்ச்சைக்குரிய வகையிலும், பரபரப்பாகவும் ஊடகங்களில் பேசப்பட்டவராவார்.

ஆனாலும், குறித்த பெண் – ஊடகங்களில் சர்ச்சைக்குரியவராக அறியப்படுவதற்கு முன்னர், இந்தப் படம் எடுக்கப்பட்டதென்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

குறித்த பெண்ணின் அடையாளத்தினை மறைத்தே, அந்தப் புகைப்படத்தினை நாம் இங்கு வெளியிடுகின்றோம்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்