இந்தியா பயணமானார் மைத்திரி

🕔 October 15, 2016

Maithiri - 012னாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று சனிக்கிழமை பிற்பகல் இந்தியா பயணமானார்.

பிராந்திய அமைப்புகளின் ஒத்துழைப்பில் புதியதோர் தோற்றைத்தக் குறிக்கும் வகையில், இந்தியாவில் நடைபெறும் பிரிக்ஸ் கூட்டமைப்பின் மாநாட்டில் பங்கேற்கும் பொருட்டு சென்றுள்ளார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் விசேட அழைப்பின் பேரில் ஜனாதிபதி இந்த விஜயத்தினை மேற்கொண்டுள்ளார்.

இம்மாநாடு இன்றும் நாளையும் இந்தியாவின் கோவாவில் நடைபெறுகிறது.

இந்தியா, சீனா, ரஷ்யா, பிரேசில், தென் ஆபிரிக்கா ஆகிய வளர்ச்சியடைந்து வரும் ஐம்பெரும் பொருளாதார நாடுகளும் பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, மியன்மார், நேபாளம், தாய்லாந்து மற்றும் இலங்கை ஆகிய BIMSTEC நாடுகளும் உட்பட ஆப்கானிஸ்தான், மாலைத்தீவு ஆகிய நாடுகளின் தலைவர்களும் இம்மாநாட்டில் பங்குபற்றுகின்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்