எமது முடிவுகளை உங்களுக்கு அறிவிக்கத் தேவையில்லை : ஜனாதிபதிக்கு, லஞ்ச ஊழல் ஆணைக்குழு கடிதம்

🕔 October 15, 2016

bribery-commission-0981ஞ்ச ஊழல் ஆணைக்குழு முன்­னெ­டுக்கும் விசா­ர­ணை­களின் முடி­வு­களை ஜனாதிபதிக்கு அறி­வித்து – ஆலோ­ச­னையோ ஏனைய தீர்­மானங்­க­ளையோ பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற சட்ட ரீதி­யி­லான கட­ப்­பாடு தமக்கு கிடை­யாது என, அந்த ஆணைக் குழுவிடமிருந்து ஜனா­தி­ப­திக்கு கடிதம் ஒன்று அனுப்பப்­பட்­டுள்­ள­தாக நம்­ப­க­ர­மாக தெரி­ய­வ­ரு­கின்­றது.

நேற்­று வெள்ளிக்கிழமை இந்த கடிதம் ஜனா­தி­ப­திக்கு அனுப்­பப்­பட்­டுள்­ள­தாக, லஞ்ச ஊழல் விசா­ரணை ஆணைக்குழுவின் தக­வல்கள் தெரி­வித்­தன. லஞ்ச ஊழல் ஆணைக் குழுவின் மூன்று ஆணை­யா­ளர்­களின் கையெ­ழுத்­துடன் இந்த கடி­த­ம், ஜனா­தி­பதி மைதி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ள­தாக அந்த தகவல்கள் சுட்­டிக்­காட்­டின.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நேற்று முன் தினம் இலங்கை மன்றக் கல்­லூ­ரியில் இடம்­பெற்ற நிகழ்­வொன்றில், குற்றப் புல­னாய்வுப் பிரிவு மற்றும் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் லஞ்ச ஊழல் ஆணைக் குழு ஆகி­யன அர­சியல் நிகழ்ச்சி நிரலின் கீழ் செயற்­பட்டால் கடு­மை­யான தீர்­மானம் எடுக்க வேண்டி ஏற்­படும் என எச்ச­ரித்­தி­ருந்தார்.

அத்­துடன் முன்னாள் பாது­காப்பு செய­லாளர் மற்றும் முன்னாள் கடற்­படை தள­ப­திகள் மூவரை நீதி­மன்றில் ஆஜர்­ப­டுத்­திய முறை­மை­யையும், ஜனா­தி­பதி விமர்­சனம் செய்திருந்ததுடன் விசா­ரணை ஆணைக் குழுக்கள் தன்னை தெளி­வு­ப­டுத்­தாது இந் நட­வ­டிக்­கையை முன்­னெ­டுத்­த­தா­கவும் கூறியிருந்தார்.

இந் நிலையிலேயே லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக் குழு, இந்த கடிதத்தை அனுப்பி வைத்துள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்