மஹிந்த நாளை உகண்டா செல்கிறார்; உகண்டாவுடன் மஹிந்தவுக்கு அப்படியென்ன உறவு? விபரம் உள்ளே

🕔 May 10, 2016

Mahinda+Uganda - 022
ஹிந்த ராஜபக்ஷ நாளை புதன்கிழமை உகண்டா பயணமாகிறார்.

உகண்டா ஜனாதிபதி யுவேரி முஸவேனி ஐந்தாவது தடவையாகவும் பதவியேற்கும் வைபவம் நாளை மறுதினம் 12 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இந்த வைபவத்தில் கலந்து கொள்ளுமாறு அந்நாட்டு அரசாங்கத்தினால் விடுக்கப்பட்ட அழைப்புக்கு இணங்க, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாளை புதன்கிழமை  நாட்டில் இருந்து புறப்பட்டுச் செல்லவுள்ளார்.

உகண்டா  – சர்வதேச ரீதியாக கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகி வரும் ஒரு நாடாகும்.

யுவேரி முஸவேனி முதற்தடவையாக 1996 ஆம் ஆண்டு ஜனாதிபதியாக பதவியேற்றார்.

அதன் பின்னர் தொடர்ந்து 2001, 2006 ஆம் ஆண்டு நடைபெறற் தேர்தல்களில் வெற்றி பெற்ற அவர்,2006 ஆம் ஆண்டு அந்நாட்டின் அரசியலமைப்பை மாற்றி, பதவி வகிக்க முடியுமான கால எல்லையை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுத்தார்.

அண்மையில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற போதிலும், தேர்தலில் மோசடி இடம்பெற்றதாக சர்வதேச கண்காணிப்பாளர்கள் குற்றம் சுமத்தினர்.

20 வருடங்களாக நாட்டை ஆட்சி செய்யும் உகண்டாவின் தற்போதைய ஜனாதிபதி, நாட்டை சர்வாதிகாரம் நோக்கி கொண்டு செல்வதாக சர்வதேச மனித உரிமை அமைப்பு தொடர்ந்து குற்றம் சுமத்தியுள்ளது.

மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த போது, 2012 ஆம் ஆண்டு, மஹிந்தவின் அழைப்புக்கு இணங்க உகண்டா ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டார்.

இதனையடுத்து, மஹிந்த ராஜபக்ஷ 2013 ஆம் ஆண்டு உகண்டா சென்றிருந்தார்.

இதேவேளை, உகண்டா பயணமாகும் தனது தந்தை மஹிந்த ராஜபக்ஷவுடன், தானும் செல்வதற்கு அவரின் புதல் யோசித ராஜபக்ஷ கோரிக்கை விடுத்திருந்த போதும், அதனை நீதிமன்றம் நிராகரித்தமை குறிப்பிடத்தக்கது.

நிதிமோசடிக் குற்றச்சாட்டில் கைதாகி விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த யோசித ராஜபக்ஷ, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்