பனாமா பேப்பர்ஸ்: நிதிப் பதுக்கலில் ஈடுபட்ட 65 இலங்கையர்களின் விபரங்கள் வெளியாகின

🕔 May 10, 2016

Panama papers - 01366னாமா இரகசிய ஆவணங்கள் நேற்று திங்கட்கிழமையும் வெளியாகியுள்ளன.

பனாமாவின் மொசெக் பொன்சேக்கா நிறுவனத்தின் உதவியுடன் நிதி பதுக்கல்களில் ஈடுபட்ட நபர்களின் பெயர்ப்பட்டியல் நேற்று இரவு புலனாய்வு ஊடகவியலாளர்களின் சர்வதேச அமைப்பினால் வெளியிடப்பட்டது.

இதில் 65 இலங்கையர்களின் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனடிப்படையில் இலங்கையின் மூன்று நிறுவனங்கள் ,இடைத்தரகர்கள் எனப்படும் 7 பேர் மற்றும் நாட்டின் 53 தனியார் முகவரிகள் அடங்கிய விபரங்கள் இதன் மூலமாக வெளியிடப்பட்டிருந்தன

சுமார் இரண்டு இலட்சத்திற்கும் மேலான ஆவணங்கள் இவ்வாறு வெளியிடப்பட்டுள்ளதாக ICIJ இணையத்தளம் செய்தி பரப்பியுள்ளது.

இவ்வாறு வெளிவந்த அனைத்து ஆவணங்களையும் https://offshoreleaks.icij.org/ எனும் இணையத்தளத்தில் காண முடியும்.

இதன்படி 65 இலங்கையர்களின் பெயர்களோடு ஏனைய நாட்டினரின் பெயர் விபரங்களும் வெளிவந்துள்ளன.Panama papers - 01343

Comments

புதிது பேஸ்புக் பக்கம்