தலைப்புச் செய்திகள்

மத்திய மாகாண ஆளுநர் மரணம்

Suranganie Ellawala - 033மத்திய மாகாண ஆளுநர் சுரங்கனி எல்லாவெல இன்று திங்கட்கிழமை அதிகாலை மரணமடைந்தார்.

சுகயீனமுற்ற நிலையில், கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் மரணமடைந்தார்.

இறக்கும் போது அவருக்கு 75 வயது.

நரம்பு சம்பந்தமான நோயினால் பாதிக்கப்பட்டிருந்த இவர், சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.