யோசிதவுக்கு பிணை; கொழும்பு மேல் நீதிமன்றம் வழங்கியது
முன்னாள் ஜனாதிபதி யோசித ராஜபக்ஷ மற்றும் சீ.எஸ்.என். ஊடக நிறுவன அதிகாரிகள் மூவரையும் பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ. ஹெயன்தொட்டுவ இன்று திங்கட்கிழமை உத்தரவிட்டார்.
பணச் சலவையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மேற்படி நால்வரையும் விளக்க மறியலில் வைக்குமாறு கடுவெல நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையிலேயே, கொழும்பு மேல் நீதிமன்றம் மேற்படி நபர்களுக்கு பிணை வழங்கியுள்ளது.
இதேவேளை, பிணையில் செல்வதற்கு வழங்கப்பட்ட அனுமதி தொடர்பான ஆவணத்தினை, உடனடியாக கடுவெல நீதிமன்றத்துக்கு அனுப்பி வைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ. ஹெயன்தொட்டுவ உத்தரவிட்டார்.
01 லட்சம் ரூபாய் பணம் மற்றும் 10 லட்சம் ரூபாய் பெருமதியான இரு சரீரப் பிணைகளில் தலா ஒவ்வொருவரையும் விடுவிப்பதற்கு இதன்போது நீதவான் பணிப்புரை வழங்கினார்.
ஆயினும், மேற்படி நபர்கள் வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
கடந்த ஜனவரி 30 ஆம் திகதி கைது செய்யப்பட்ட யோசித ராஜபக்ஷ, அன்றைய தினத்திலிருந்து விளக்க மறியிலில் வைக்கப்பட்டிருந்தார்.