
சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட 53,604 பேர் தற்போது மாதம் 10,000 ரூபாய் நிதியுதவியைப் பெற்று வருவதாக, சமூகப் பாதுகாப்பு அமைச்சர் உபாலி பன்னிலகே இன்று (25) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் உதவிகள் குறித்து, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹன பண்டார எழுப்பிய வாய்மொழி வினாவுக்குப் பதிலளிக்கும்போதே – அமைச்சர் இத்தகவலை வெளியிட்டார்.
இந்த நிதியுதவி வழங்குவதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக அந்த நாடாளுமன்ற உறுப்பினர் முன்வைத்த குற்றச்சாட்டை மறுத்த அமைச்சர் பன்னிலகே, அத்தகைய கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை என்று குறிப்பிட்டார்.
“இந்த விசேட நிதியுதவியைப் பெறும் பெரும்பாலானோர் ‘அஸ்வெசும’ நலத்திட்டத்தின் பயனாளிகளாகவும் உள்ளனர்” என்றும் அமைச்சர் கூறினார்.



