
நாடாளுமன்ற உறுப்பினர்களின் மாதாந்திர சம்பளம் 60,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா இன்று (06) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் புதிய கொடுப்பனவு தற்போது ரூ. 484,000 ஆக உள்ளது என்றும் அவர் கூறினார்.

“உங்களால் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தை உயர்த்த முடிகிறது, ஆனால் ஏழை அரச ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்த முடியவில்லை,” என்றும் அவர் கூறினார்.
அவரை நேரடியாக விஷயத்திற்கு வருமாறு கேட்டுக்கொண்ட, சபைக்குத் தலைமை தாங்கிய நாடாளுமன்ற உறுப்பினர் உபுல் கித்சிறியுடன், அர்ச்சுனா எம்.பி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
“மற்றவர்கள் பல விஷயங்களைப் பற்றிப் பேச நீங்கள் அனுமதிக்கிறீர்கள், ஆனால் நான் மட்டும் தடுக்கப்படுகிறேன். இது நியாயமற்றது” என்று தனது சம்பளப் பட்டியலை காட்டியவாறு நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கூறினார்.
அதற்குத் தலைமை தாங்கிய நாடாளுமன்ற உறுப்பினர் கித்சிறி, நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா நிலையியல் விதிகளுக்கு எதிராகக் கூறும் அனைத்தும் நீக்கப்படும் என்று அறிவித்தார்.
இதன்போது, “அனைத்து அரசாங்க உறுப்பினர்களும் ஒருநாள் சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள்” என்று நாடாளுமன்ற உறுப்பினர் அச்சுனா ராமநாதன் கூறினார்.


