
ஒரு தனியார் பஸ்ஸும் மோட்டார் பைக்கும் வீரவில பிரதேசத்திலுள்ள மாத்தறை–திஸ்ஸமஹாராம பிரதான சாலையில் மோதிக்கொண்டதில் குறைந்தது 19 பேர் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
காயமடைந்தவர்களில் 11 ஆண்களும் எட்டு பெண்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திஸ்ஸமஹாராமயவிலிருந்து மாத்தறை நோக்கிச் சென்றுகொண்டிருந்த பஸ், வீரவில பிரதேச செயலகத்திற்கு அருகே மோட்டார் பைக் மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டது.
பின்னர், அது வீதியிலிருந்து விலகி ஒரு மரத்தின் மீது மோதியது.
காயமடைந்தவர்கள் தெபரவெவ வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கவலைக்கிடமான நிலையில் இருந்த நான்கு பேர் பின்னர் ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலைக்குமாற்றப்பட்டனர்.வீரவில காவல்துறை மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறத


