தலைப்புச் செய்திகள்

அரகலயப் போராட்டத்தில் கைது செய்து தடுத்து வைத்திருந்தமை, அடிப்படை உரிமை மீறல்: தேசபந்து தென்னகோனுக்கு எதிராக, உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

ரகாலயப் போராட்டம் நடந்த 2022ஆம் ஆண்டு காலத்தில், சமூக ஊடகச் செயற்பாட்டாளர் அனுருத்த பண்டார கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது, அவரின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மேல் மாகாணத்துக்கு பொறுப்பான அப்போதைய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மற்றும் கொழும்பு வடக்கு விசேஷ புலனாய்வுப் பிரிவின் பொறுப்பு அதிகாரியான நளின் பிரியந்த ஆகியோரே இந்த மீறலுக்குப் பொறுப்பானவர்கள் என நீதிமன்றம் கண்டறிந்தது.

அரகலய போராட்டத்தின் போது, தனது கைது மற்றும் தடுத்து வைக்கப்பட்டதன் சட்டப்பூர்வத்தன்மையை எதிர்த்து, அனுருத்த பண்டார தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுவை பரிசீலனை செய்த பின்னரே இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது.