
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பிரத்தியேகச் செயலாளர் சுகீஸ்வர பண்டாரவை குற்றப் புலனாய்வுத் திணைக்கழகம் கைது செய்துள்ளது.
அரசாங்க ஊதியங்கள் தொடர்பான முறைகேடுகள் குறித்த தொடர் விசாரணையின் தொடர்பில் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கோட்டாவின் பிரத்தியேகச் செயலாளராகப் பணியாற்றிய காலத்தில், இவர் ஒரே நேரத்தில் இரண்டு வெவ்வேறு அரசாங்க நிறுவனங்களிடமிருந்து ஊதியம் பெற்றதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.


