
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே ஒரு சமாதான ஒப்பந்தம் எட்டப்பட்டு, அது தற்போது நடைமுறைக்கு வந்துவிட்டது என்றும், அதற்கான கையெழுத்திடும் நிகழ்வு வெள்ளிக்கிழமை சுவிட்சர்லாந்தில் நடைபெற உள்ளது என்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் தெரிவித்துள்ளார்.
ஈரானுடனான ஒப்பந்தம் தற்போது முழுமையடைந்துவிட்டது என்று கூறியுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஹோர்முஸ் நீரிணையில் அமெரிக்கா விதித்திருந்த கடற்படை முற்றுகை முடிவுக்கு வருவதாகவும் அறிவித்துள்ளார்.

ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது என்றும், லெபனான் உட்பட அனைத்து முனைகளிலும் போர் முடிவுக்கு வரும் என்றும் ஈரானின் வெளியுறவு பிரதியமைச்சர் காசெம் கரிபாபடி(Kazem Gharibabadi) தெரிவித்துள்ளார்.
“தோல்வியை ஏற்றுக்கொண்டு சரணடைவதைத் தவிர வேறு வழியில்லை” என்பதை அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் ஈரானிய மக்கள் நிரூபித்துள்ளனர் என்று ஈரானிய ராணுவம் தெரிவித்துள்ளது.


