தலைப்புச் செய்திகள்

ரூ.20 அதிக விலையில் தண்ணீர் போத்தல், ரூ.05 அதிக விலையில் அரிசி விற்றோருக்கு: மொத்தமாக 06 லட்சம் ரூபாய் அபராதம்

அரசாங்கம் நிர்ணயித்த கட்டுப்பாட்டு விலையை மீறி – கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதியில் பொருட்களை விற்பனை செய்த இரண்டு வியாபார நிலையங்களுக்கு, கல்முனை நீதிவான் நீதிமன்றம் இன்று (04) மொத்தமாக ரூ.600,000 அபராதம் விதித்துள்ளது.

அம்பாறை மாவட்ட நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை தாக்கல் செய்த வழக்குகள் இன்று கல்முனை நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது.

முதல் வழக்கில், 130 ரூபாய் பெறுமதியான தண்ணீர் போத்தலை, 150 ரூபாய்க்கு, அதாவது 20 ரூபாய் அதிகமாக விற்பனை செய்த கடை ஒன்றுக்கு ரூ.500,000 அபராதம் விதிக்கப்பட்டது.

இரண்டாவது வழக்கில், அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை விட கிலோவொன்றுக்கு 05 ரூபாய் அதிகமாக வைத்து விற்பனை செய்த வியாபார நிலையம் ஒன்றிற்கு ரூ.100,000 அபராதம் விதிக்கப்பட்டது.