தலைப்புச் செய்திகள்

ஐஸ், ஹெரோயினுடன் நிந்தவூர் பகுதியில் இருவர் கைது

– பாறுக் ஷிஹான் –

ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களை கடத்தி விநியோகித்த சந்தேக நபர்களை அக்கரைப்பற்று -தம்பட்டை விசேட அதிரடிப்படையினர் நிந்தவூர் பகுதியில் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் கடந்த (16) இரவு அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

பொதுமக்கள் வழங்கிய தகவலுக்கு அமைவாக, அக்கரைப்பற்று -தம்பட்டை விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட விசேட சுற்றி வளைப்பின் போது, வீடொன்றில் வைத்து, இரு சந்தேக நபர்கள் போதைப்பொருட்களுடன் கைதாகினர்.

இவ்வாறு கைதானவர்கள் நிந்தவூர் பகுதியைச் சேர்ந்தவர்களாவர். இவர்கள் ஏற்கனவே, போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கைக்கு உட்பட்டவர்கள் என பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.

குறித்த சந்தேக நபர்கள் இப்பகுதியில் மிக நீண்ட காலமாக  போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

கைதானவர்கள் 30 மற்றும் 50 வயது மதிக்கத்தக்கவர்களாவர். இவர்களிடமிருந்து 40 கிராம் ஐஸ் மற்றும்  60 கிராம் ஹெரோயின் போதைப்பொருட்கள், கைத்தொலைபேசிகள் மற்றும் பணம் என்பன கைப்பற்றப்பட்டன.

சந்தேக நபர்கள் சட்ட நடவடிக்கைக்கா நிந்தவூர் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.