தலைப்புச் செய்திகள்

சிஐடி பணிப்பாளர் ஷானியை பிரதிப் பொலிஸ் மா அதிபராக தரமுயர்த்துமாறு உத்தரவு

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளருமான ஷானி அபேசேகராவை, பிரதிப் பொலிஸ் மா அதிபர் பதவிக்கு பதவி உயத்துமாறு நிர்வாக மேன்முறையீட்டுத் நியாய சபை (Administrative Appeals Tribunal) உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, இந்த முடிவு இன்று (13) தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பதவி உயர்வு ஓகஸ்ட் 25, 2026 முதல் அமுலுக்கு வரும் என்றும், அவர் பணி நீக்கம் செய்யப்பட்ட நாளிலிருந்து இழந்த அனைத்து சம்பள நிலுவைகளையும் படிகளையும் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் வரலாற்றில் ஒரு முக்கிய அதிகாரியாகக் கருதப்படும் ஷானி அபேசேகர, சமீபத்திய ஆண்டுகளில் பல சிக்கலான மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த குற்றப் புலனாய்வுகளுக்குத் தலைமை தாங்கியிருந்தார்.

அவர் ஜூலை 2020-ல் கைது செய்யப்பட்டு, மேல்முறையீட்டு நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்படுவதற்கு முன்பு 11 மாதங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

இருப்பினும், ஷானி அபேசேகர – பின்னர் 2024-ல் சுற்றறிக்கை 3/2018-இன் விதிகளின் கீழ் குற்றப் புலனாய்வு திணைக்களனத்தின் பணிப்பாளராக மீண்டும் நியமிக்கப்பட்டார்.