தலைப்புச் செய்திகள்

இலங்கை மின்சார சபை: 50 வருட பயணம் இன்று நள்ளிரவுடன் முடிவுக்கு வருகிறது

லங்கை மின்சார சபை (CEB) இன்று 909) நள்ளிரவுடன் கலைக்கப்படுகிறது. நாட்டின் மின்சாரத் துறையின் ஒரு பெரிய மறுசீரமைப்பின் பொருட்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

2024 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க இலங்கை மின்சாரச் சட்டம் இயற்றப்பட்டதைத் தொடர்ந்து, ஓகஸ்ட் 06, 2025 அன்று நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட திருத்தங்கள், மின்சார சபையை பகுதிகளாகப் பிரிப்பதற்கு வழி வகுத்தது.

எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி – பெப்ரவரி 06 அன்று வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி மூலம் மறுசீரமைப்பை முறைப்படுத்தினார். மின்சார சபையின் செயல்பாடுகள் மற்றும் பொறுப்புகளை புதிதாக உருவாக்கப்பட்ட நிறுவனங்களுக்கு மாற்றுவதற்கான சட்ட கட்டமைப்பை அமைத்தார்.

மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ், மின்சார சபையின் செயல்பாடுகள் மின்சார உற்பத்தி, பரிமாற்றம், விநியோகம் மற்றும் அமைப்பு செயல்பாடுகளுக்கு பொறுப்பான 06 நிறுவனங்களுக்கு இடையில் பிரிக்கப்படும்.

புதிய நிறுவனங்களில் பலவற்றிற்கான நியமனங்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளன. மின்சார விநியோக மின் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக கே.எஸ்.ஐ. குமார நியமிக்கப்பட்டுள்ளார். அதே நேரத்தில் மின்சார உற்பத்தி மின் நிறுவனத்தின் தற்காலிக தலைமை நிர்வாக அதிகாரியாக சாலிய பண்டிதரட்ன நியமிக்கப்பட்டுள்ளார். தேசிய மின்மாற்றி வலையமைப்பு சேவை வழங்குநர் தனியார் நிறுவனத்தின் தற்காலிக தலைமை நிர்வாக அதிகாரியாக என்.எஸ். வெட்டசிங்க பணியாற்றுவார்.

மாற்றத்தின் ஒரு பகுதியாக, சுய விருப்பின் பேரில் ஓய்வு பெறத் தீர்மானித்த, பல நீண்டகால ஊழியர்களின் சேவைகளும் இந்த மறுசீரமைப்பின் மூலம் முடிவக்கு வருகின்றன.

இருப்பினும், இந்தத் துறையில் தொடர்ந்தும் பணியாற்ற விரும்பும் ஊழியர்கள், பிரிக்கப்பட்ட நிறுவனங்களில் உள்வாங்கப்படுவார்கள் என்று அரசாங்கம் கூறியுள்ளது.

இலங்கை மின்சார சபை கலைக்கப்படுவதன் மூலம் – இலங்கையின் மின்சாரத் துறையின் 50 ஆண்டுகளுக்கும் மேலான மையப்படுத்தப்பட்ட நிர்வாகம் முடிவுக்குக் கொண்டுவரப்படுவதோடு, நாட்டின் மின்சாரத் துறையை நவீனமயமாக்குவதை நோக்கமாகக் கொண்ட ஒரு புதிய நிறுவன கட்டமைப்பின் தொடக்கத்தை துவக்க வைக்கிறது.