
சட்ட விரோதமாக சொத்துக்களை ஈட்டினார் எனும் குற்றச்சாட்டில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவை, லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
வாக்குமூலம் வழங்குவதற்காக லஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு இன்று (09) காலை – அவர் வந்தபோது கைது செய்யப்பட்டார்.

243.8 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை சட்டவிரோதமாக ஈட்டினார் என, சஜின்வாஸ் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.


