
பல்கலைக்கழக மாணவர்களுக்கு அதிகரித்து வழங்கப்படும் மஹபொல உயர்கல்வி உதவித்தொகை 10 ஆயிரம் ரூபாய், நாளை செவ்வாய்க்கிழமை (10) முதல் மாணவர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படவுள்ளது.
2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட முன்மொழிவுகளின் கீழ், பல்கலைக்கழக மாணவர்களுக்கான மஹபொல உயர்கல்வி உதவித்தொகை ரூ. 10,000 ஆக அதிகரிக்கப்பட்டது.
இதன்படி, செவ்வாய்க்கிழமை முதல் – குறித்த தொகை வைப்பிடப்படும் என்று லலித் அதுலத்முதலி மஹபொல உயர்கல்வி உதவித்தொகை அறக்கட்டளை நிதியத்தின் தலைவர் ஓய்வுபெற்ற நீதிபதி விஜித் மலல்கொட தெரிவித்தார்.

2026 ஆம் ஆண்டு வரவு – செலவுத் திட்ட முன்மொழிவுகளின் கீழ், இந்த கொடுப்பனவு ரூ. 7,500 இலிருந்து ரூ. 10,000 ஆக அதிகரிக்கப்பட்டு, இந்த ஆண்டு ஜனவரி முதல் அமலுக்கு வந்தது.


